கருவி நிறுவன தேவை மதிப்பீட்டுக் குழுவினரால் அங்கத்தவர்களின் கோரிக்கைக் கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு அத்தியாவசியமான தேவைகள் நன்கொடையாளர்கள் ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த வகையில் கிணறு வசதியின்றி இருந்த 2அங்கத்தவர்களுக்கு குழாய்க்கிணறுகள் மற்றும் தொட்டி என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டன. இவ்வுதித்திட்டத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 40,000.00 ரூபா வழங்கப்பட்டது. மேலும் ஒரு பயனாளிக்கு மார்ச் 10இல் 25,000.00 ரூபா பெறுமதியிலான நீர்குழாய் அமைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இவ்வுதவிகளை வழங்க உதவிய அமைப்புக்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றியினைத் தெரிவிக்கின்றது.