Karuvi -Jaffna

karuvi.org

மாதம் ஒரு பொதி-2020

மாதம் ஒரு பொதி-2020

வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ள எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒருபொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இவ்வுதவிகளை வழங்கி வருகின்ற அன்பர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு கருவி நிறுவனம் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கொரோனா வைரசின் பாதிப்பினால் தொழில் வாய்ப்புக்களை இழந்திருந்த எமது அங்கத்தவர்களுக்கும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி உதவிய அனைவருக்கும் நிறுவனம் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இத்திட்டத்தின் கீழ் 2000 முதல் 3000 ரூபா பெறுமதியான உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் 904 உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான பொதிகள் குறித்த அம்மாவட்டங்களில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணுகு வசதிப்படுத்தல்கள்-2020
Previous Post அணுகு வசதிப்படுத்தல்கள்-2020
கல்வியுதவி -2020
Next Post கல்வியுதவி -2020