அறிமுகம்:
01.01.2017-31.08.2017 வரையான காலப் பகுதியில் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான விபரம் இங்கே தரப்பட்டுள்ளன.
சுயதொழில் உதவிகள் வழங்கல்
அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்பொருட்டு எமது நிறுவனம் பொருத்தமான சுயதொழில் உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவி புரிந்து வருகின்றது.இந்த வகையில் இக்காலப்பகுதியில் ஒரு பயனாளிக்கு பலசரக்குக்கடை நடாத்துவதற்குத் தேவையான பொருட்களும், மற்றுமொரு பயனாளிக்கு சுயதொழிலினை விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படை உதவிகளும் வழங்கப்பட்டன.
கல்வி கற்கும் மாணவார்களுக்கான உதவிகள் வழங்கல்:
கல்வி கற்கும் அங்கத்தவா்கள் மற்றும் அங்கத்தவா்களின் கல்வி கற்கும் பிள்ளைகள் ஆகியோரின் கல்வி வளரச்சியினை உயர்வடையச் செய்ம்யு பொருட்டு எமது நிறுவனம் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளினை வழங்கி வருகின்றது. இந்த வகையில்; எமது நிறுவனத்தினால் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற கல்வி நிதி 28 மாணவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 7ம் திகதி 25 பிள்ளைகளுக்கும் யூன் 11ம் திகதி 25 பிள்ளைகளுக்கும் ஆக 50 மாணவா;களுக்கு சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு வங்கிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் 31 பெண் பிள்ளைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன. இக்காலப்பகுதியில் 80 மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடனுதவி வழங்கல்:
அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் எமது நிறுவனம் கடனுதவிகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இக்காலப் பகுதியில் ஒரு அங்கத்தவருக்கு வட்டியின்றிய கடனுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விழாக்களும் நிகழ்கவுளும்:
எமது நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்வூ யூன் 11ம் திகதி நல்லூர்; துர்க்கா மணிமண்டபத்தில் இடம் பெற்றது.
மாதம் ஒரு பொதி :
எமது நிறுவனம் தொழில்புரிய முடியாத நிலையிலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி என்னும் திட்டத்தின் கீழ் உலா; உணவுப் பொதிகளை சுழற்சி முறையில் வழங்கி வருகின்றது. இந்த வகையில் இக்காலப்பகுதியில் 95 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
‘வலு’ சஞ்சிகை:
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை சமூகத்திற்கு ஏற்படுத்தும் நோக்குடன் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விடயங்களினையும் அவர்களது ஆக்கங்களினையும் பொது விடயங்களினையும் தாங்கி வலு என்னும் காலாண்டுச் சஞ்சிகை எமது நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. 2014 ஆண்டு முதல் காலாண்டுக்கொரு முறை வெளிவரும் இச்சஞ்சிகையின் 13 14 ஆகிய இதழ்கள் இக்காலப்பகுதியில் வெளிவந்துள்ளன. 14ஆம் இதழ் தொடக்கம் இச்சஞ்சிகையில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு பக்கங்கள் அச்சிடப்பட்டு வெளிவருகின்றது.
பட்டிமன்றக்குழு:
எமது நிறுவன அங்கத்தவர்களின் பங்களிப்புடன் பட்டிமன்றக்குழு ஆலய நிகழ்கவுள் பொது நிகழ்கவுள் என்பனவற்றில் சமூகத்திற்கு பொருத்தமான தலைப்புக்களின் கீழ் பட்டிமன்ற ஆற்றுகைகளினை நிகழ்த்தி வருகின்றது. இந்த வகையில் இக்காலப்பகுதியில் அல்வாய் வேவிலந்தை முத்துமாhpயம்மன் தேவஸ்தானத்தில் எமது பட்டிமன்ற ஆற்றுகை ஒன்று இடம் பெற்றது.
இராகஸ்ருதி இசைக்குழு:
எமது நிறுவன அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இராகஸ்ருதி என்னும் பெயாில் இசைக் குழு ஒன்று ஆலயங்கள்இ பொது நிகழ்கவுகள் என்பனவற்றில் இசையாற்றுகைகளினை நிகழ்த்தி வருகின்றது. இக்குழுவினரின் இசையாற்றுகைகள் இக்காலப்பகுதியில் அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் தேவஸ்தானம் “பிரான்பற்று அருளமுதீஸ்வரி திருமண மண்டபம்”ஆண்டு விழா மற்றும் திருமண நிகழ்வுகள் என்பவற்றிலும் இடம் பெற்றன.
உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்;தல் அலகு:
எமது நிறுவனம் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் அலகினூடாக Shine என்னும் பெயரில் திரவ சலவை சவர்க்காரம் ஒன்றினை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது. இதனூடாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புக்களினை வழங்கி வருகின்றௌம்.
இவ்வாண்டு நல்லூh; மகோற்சவ காலத்தில் காட்சிக்கூடம் ஒன்றினை அமைத்து அதனூடாக Shine இனை விற்பனை செய்திருந்தோம்.
பயில் அமா;வூகள்:
எமது நிறுவன அங்கத்தவா;கள் மற்;றும் நிh;வாக சபையினா; நிறுவனம்சாh; மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விடயங்களை மேலும் தொரிந்து கொள்ளும் நோக்குடனும் சமூகம் சார்ந்த புதிய நடைமுறைகள் மருத்துவ விடயங்கள் என்பனவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டும் தொழில்ப் பயிற்சி தொடர்பான சுயதொழில் அறிவூட்டலை வழங்கும் முகமாகவும் பயில் அமர்கவுளை நடாத்தியும் பங்கு பற்றியும் வருகின்றனர் இந்த வகையில் இக்காலப்பகுதியில் எமது நிறுவனம் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பத்திற்கும் மேற்பட்ட பயில் அமர்கவுளில் எமது அங்கத்தவர்கள் பங்கு பற்றி பயன் பெற்றுள்ளனர்
கருவியினை நிரந்தரமான இடத்தில் நிறுவுதல்:
எமது நிறுவனம் தற்போது இரண்டு வாடகை வீடுகளில் இயங்கி வருகின்றது. எனவே வலுவிழந்தவர்கள் வந்து செல்லக் கூடிய வசதியான இடம் ஒன்றில் விவசாயப் பண்ணைஇ தொழிற்பயிற்சிப் பகுதிஇ உற்பத்தி தொழிற்சாலைகள் என்பனவற்றை ஒரே இடத்தில் நிறுவி அதிக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் காணியொன்றினைக் கொள்வனவு செய்ய எண்ணியூள்ளோம். இதற்கான பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணி வெற்றியளிக்கும் இடத்து வலுவிழந்தவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகள் பெருமளவில் குறைவடையூம் என எதிர்பார்க்கின்றோம்
மடிக்கணினி அன்பளிப்பு:
முடிவூரை:
எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பணிகளுக்கு நிதிஇ பொருள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் உதவிகளினை வழங்கி வருகின்ற அன்பர்கள்இ சமூகசேவை ஆர்வலர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு எமது சமூகப் பணிகளோடு இணைந்துள்ள ஆலயங்கள், சங்கங்கள் ,அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு எமது நன்றிகளைத் தொரிவித்துக் கொள்கின்றௌம். கருவியின் சமூகப் பணிகளுக்கு இறை கருணையூம் சமூகப் பணியாளார்களின் பங்களிப்பும் தொடார்ந்தும் கிட்டும் என நாம் நம்புகின்றோம்.