ஐநாவின் 2019 ஆம் ஆண்டிற்கான “2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வலுவிழப்புடன் கூடிய நபர்களின் பங்குபற்றுதலையும் அவர்களின் தலைமைத்துவத்தையும் ஊக்குவித்தல்”.எனும் தொனிப் பொருளினை மையப்படுத்தி எமது நிறுவனம் இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை 03.12.2019 அன்று மானிப்பாய் நகரசபை மண்டபத்தில் அனுட்டித்திருந்தது.
செயலாளர் திரு.து.யசிந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கான ஆசிச் செய்தியினை மானிப்பாய் புனித அந்தோனியார் தேவாலய பங்குத்தந்தை அருட்பணி ஞா.ஞானரூபன் அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் பிரத விருந்தினராக யாழ் பல்கலைக்கழக கணிதவியற் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா அவர்களும், சிறப்பு விருந்தினராக உடுப்பிட்டி மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் திரு. கிருஸ்ணபிள்ளை கதிர்காமநாதன் மற்றும் கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் திரு வ.செல்வம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது வலு வெள்ளி மலர் வெளியீடு செய்யப்பட்டது. மேலும் கருவி நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதை, சிறுகதை, ஓவியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவியும், 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மற்றும் மாணவர்களுக்கான கல்வி நிதி, அங்கத்தவர்களுக்கு சத்துமா என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கருவி நிர்வாக சபையினர், அங்கத்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், பணியாளர்கள், நன்கொடையாளர்கள், வளவாளர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது ஓய்வு நிலை இசை ஆசிரியர். திரு.பொன் ஸ்ரீவாமதேவன் அவர்களின் இசைகச்சேரி மற்றும் கௌரவிப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-2019
Previous Post
மாற்றுத்திறனாளிகள் தினம்-2018
Next Post
கருவியின் ஆண்டு விழா-2018