கருவி மாற்றுத்திறனாளிகளின் சமுகவள நிலையம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே நடாத்திய கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியப் போட்டி முடிவுகள், கருவி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினை அன்ரன்ராஜ் நியூட்டன் (யா/நெடுந்தீவு மகாவித்தியாலயம்), இரண்டாம் இடத்தினை ஜெயக்குமார் யதுசா (யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்). ஓவியப் போட்டியில் முதலாம் இடத்தினை த.ஹஜீதன் (யா/கல்வயல் ஸ்ரீசண்முகானந்தா வித்தியாலயம்), இரண்டாம் இடத்தினை ஜெயக்குமார் கவீசன் (யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்) ஆகியோர் பெற்றுள்ளனர்.
பொதுமக்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினை திருமதி பாஸ்கரன் சித்திரா (மானிப்பாய்), ஓவியப்போட்டியில் முதலாம் இடத்தினை சுகர்ணா கஜப்பிரியன் (இணுவில்), இரண்டாம் இடத்தினை தயாமினி குபேரமூர்த்தி (இணுவில்), கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினை தெட்சணாமூர்த்தி கரிதரன் (மூதூர், திருகோணமலை), இரண்டாம் இடத்தினை சுந்தரலிங்கம் நிருத்திகன் (அல்வாய்), மூன்றாம் இடத்தினை இ.நவனிதன் (மட்டக்களப்பு), சிறுகதைப் போட்டியில் முதலாம் இடத்தினை திருமதி சுதாமதி தயாபரன் (சாவகச்சேரி) ஆகியோர் பெற்றுள்ளார்.
இல:290, பருத்தித்துறை வீதி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகளின் சமுகவள நிலையத்தில் எதிர்வரும் 03.12.2020 அன்று இடம்பெறும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது இவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்படும்.
வெற்றியாளர்கள் தம்மை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் (தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, தேர்ச்சி அறிக்கை) ஆகியவற்றுடன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கருவி நிறுவனத்திற்கு வருகை தந்து பரிசில்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு:021 205 4224