கருவி நிறுவனம் நலிவுற்ற நிலையிலுள்ள அங்கத்தவர்களினதும் அவர்களினது குடும்பங்களினதும் வாழ்வாதார நிலையை உயர்வடையச் செய்யும் பொருட்டு பொருத்தமான வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. அங்கத்தவர்களின் கோரிக்கைகள் தேவைமதீப்பீட்டுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இந்த வகையில் 2020 பெப்ரவரி 13இல் பயனாளி ஒருவருக்கு 10,000.00 ரூபா பெறுமதியான தூள் திரிப்பதற்கான மூலப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. பெப்ரவரி 15இல் சந்தைப்படுத்தல் பிரிவில் பணியாற்றும் அங்கத்தவர் ஒருவருக்கு ரூபா 200,000.00 பெறுமதியான கருவி உற்பத்திப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. மார்ச் 15இல் பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 50,000.00 வழங்கி வைக்கப்பட்டது. செப்ரெம்பர் 19இல் அங்கத்தவர் ஒருவருக்கு ரூபா 45,000.00 பெறுமதியான கருவி உற்பத்திப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. செப்ரெம்பர் 26இல் பயனாளி ஒருவருக்கு ரூபா 90,000.00 பெறுமதியான பழச்சாறினை பயன்படுத்தி மென்பானம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் ஒருதொகுதி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. ஒக்டோபர் 21இல் பயனாளி ஒருவருக்கு 10,000.00 ரூபா பெறுமதியான கருவி உற்பத்திப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கருவி நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்ட இவ்வுதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உதவி புரிந்த அமைப்புக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் கருவி நிறுவனம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது
