அங்கத்தவர்களிலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிலும் மாணவ நிலையில் இருப்பவர்களின் கல்வி நிலையை உயர்வடையச் செய்யும் நோக்கோடு கருவி நிறுவனம் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் பொருத்தமான உதவிகளினை வழங்கி வருகின்றது. இந்த வகையில் பெப்ரவரி 13இல் ஒரு பயனாளிக்கு ரூபா 17200.00 பெறுமதியான துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது. ஜனவரி மாதம் முதல் அன்பர் ஒருவரால் மாணவன் ஒருவருக்கு மாதாந்த நிதி உதவியாக ரூபா 2000 வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ஒரு அன்பரினால் 5 மாணவர்களுக்கு 1500 ரூபா வீதம் மாதாந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தினூடாக தொடர்ச்சியாக மாணவர் ஒருவருக்கு ரூபா 1000.00 என்ற அடிப்படையில் 10 மாணவர்களளுக்கு மாதாந்த கல்விநிதி வழங்கப்பட்டு வருகின்றது. டிசெம்பர் 3இல் 20மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் எமது செயற்பாடுகளுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகின்ற நன்கொடையாளர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றியினை உரித்தாக்குகின்றது.