இவ்வாண்டு “மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கி மற்றும் அணுகக்கூடிய வசதிகளுடன் கொவிட் 19 இற்குப் பின்னரான நிலைத்திருக்கக்கூடிய வகையில் உலகைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப் பொருளில் உலகளாவிய ரீதியில் டிசம்பர் 03ம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கருவி நிறுவனத்தில் கொவிட்19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக 03.12.2020 அன்று அனுஷ்டிக்கப்பட்டது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வதார உதவிகள், உலர்உணவுப் பொதிகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு இத்தினத்தையொட்டி வெளிமாவட்ட பயனாளிகளுக்கு குறித்த மாவட்டங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இடங்களில் வைத்து உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கருவி நிறுவனம் வருடாந்தாம் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டை நடாத்தும் கவிதை, கட்டுரை, ஒவியம், சிறுகதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பனவும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.