Karuvi -Jaffna

karuvi.org

மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2022

மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2022

டிசெம்பர் .03, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் நடாத்தும் கட்டுரை/ கவிதை/ சிறுகதை/ சித்திரப் போட்டிகள் -2022

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் வருடாந்தம் நடாத்தும் கட்டுரை/ கவிதை/ சிறுகதை/ சித்திரப் போட்டிகள் இம்முறையும் நடாத்தப்படவுள்ளன. பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என இரு பிரிவுகளில் கீழ் போட்டியாளர்கள் பங்கு பற்ற முடியும்.

போட்டியாளர்கள் ஆக்கங்களை கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம், இல:290, பருத்தித்துறை வீதி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கு 2022 ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வருட போட்டிகளுக்கான ஆக்கங்களை “சமகால மாற்றங்களும் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்களும்” எனும் கருப் பொருளில் அமைத்தல் வேண்டும்.

கட்டுரை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் பாடசாலை மாணவர்களாயின் 250-300சொற்களைக் கொண்டதாகவும் பொதுமக்களாயின் 300-350சொற்களைக் கொண்டதாகவும் ஆக்கங்களை அமைத்தல் வேண்டும்.

கவிதைப் போட்டியில் பங்குபற்றுபவர்கள் பாடசாலை மாணவர்களாயின் 20-24 வரிகளைக் கொண்டதாகவும் பொதுமக்களாயின் 36-40 வரிகளைக் கொண்டதாகவும் கவிதையினை அமைத்தல் வேண்டும்.

சித்திரப் போட்டியில் பங்குபற்றுபவர்கள் A4 தாளில் சித்திரத்தினை வரைந்து அனுப்புதல் வேண்டும்.

ஆக்கங்களை கணணியில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவான கையெழுத்தில் எழுதியோ அனுப்பி வைக்க முடியும். ஒருவர் ஒரு போட்டிக்கு ஒரு ஆக்கத்தினை மட்டுமே அனுப்ப முடியும். உங்கள் ஆக்கத்துடன் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பிறந்தஆண்டு, மாதம், திகதி என்பனவற்றை உள்ளடக்கிய சுயவிபரப்படிவத்தினை இணைத்து அனுப்புதல் வேண்டும். பாடசாலை மாணவர்கள் மேலதிகமாக பாடசாலையின் பெயர், தரம் என்பற்றினையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும். ஆக்கங்கள் உங்கள் புதிய சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். ஏற்கனவே ஊடகங்கள், போட்டிகள் என்பவற்றுக்கு அனுப்பப்பட்ட ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒவ்வொரு போட்டியிலும் 3 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பெறுமதி மிக்க பரிசில்கள் மற்றும் சான்றிதழ், பதக்கம் என்பன வழங்கி வைக்கப்படும். வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது வழங்கி வைக்கப்படும். தரமான ஆக்கங்கள் வலுச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை 021 205 4224, 076 638 5563 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
நன்றி

கருவியின் பதிவுகள் 1.1.2021 தொடக்கம் 31.12.2021 வரை
Previous Post கருவியின் பதிவுகள் 1.1.2021 தொடக்கம் 31.12.2021 வரை
கருவி புதியதோர் மாற்றத்தை நோக்கி
Next Post கருவி புதியதோர் மாற்றத்தை நோக்கி