Karuvi -Jaffna

karuvi.org

ஆண்டு நிறைவு விழா 2015 : ANNUAL DAY 2015

ஆண்டு நிறைவு விழா 2015 : ANNUAL DAY 2015

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமுகவள நிலையத்தின் 02ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த 12.06.2015ஆம் திகதி வெள்ளிக்கிழமை கருவி நிறுவன வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமுகவள நிலையத் தலைவர் திரு.க.தர்மசேகரம் நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார். திரு.து.யசிந்தன் நிறுவனச் செயலாளரின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

சிம்மய மிசன் ஐக்கிரத சைத்தெனிய சுவாமிகள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக நல்லாயன் நிலைய அருட்திரு. ஆர்.ஸ்ரலின் அவர்களும் கலந்துகொண்டு ஆசியுரைகள் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி. சுபாஜினி மதியழகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். இலங்கை மன்றக் கல்லூரி விரிவுரையாளர் திரு. கி.ஐங்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவின்போது கருவி நிலையத்தின் பயனாளிகளுக்கு மாடு, ஆடு வளர்ப்பு சுயதொழில் உதவிகளும் பயனாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சைக்காக 35 ஆயிரம் ருபா பெறுமதியான மருத்துவ உதவிகளும் ஏனைய பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 200இற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கருவி நிறுவன இராக ஸ்ருதி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கருவி நிறுவனப் பொருளாளர் திரு. யே.கொன்கிளேடியஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.

கடந்த 2 வருடங்களுக்கு முன் கருவி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு வகையான சேவைகளை ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“KARUVI” Centre For Social Resource OF Differently Abled was celebrate its 2nd annual day function 0n 12.06.2015 at the centre.

This function was headed by Mr.K. Tharmasekaram who is the president of Karuvi and this function was started by Mr.T Jasinthan with welcome speech who is the secretary of this organization.

Simmaiya mission jakkiratha saithanja swami and Ref. farther.R.Stalin were participate in this function as special guest and giving their blessing to this organization.

Mrs.Subajini Mathialagan participated in this function as the chief guest who is the additional division secretary in divisional secretariat Nallur and Mr.k.Iynkaran, lecturer of SriLanka foundation participated as special guest.
In this program, our organization gave cow and goat for two members as the livelihood assistance for their future at the cost of Rs 48,000 and also we gave Rs 35,000 to a student for a surgery in leg. Above 200 members were participate in this program.

our organization members did a musical show by our musical group ‘RAGA STRUTHI’ very grandly. This program was ended by our organization treasurer Mr.J.Concladious with the vote of thanks. This was our final best program on that day.

Although this organization started before 02 years, it helps to the differently abled for their good future in many ways.

ANNUAL DAY 2015 (1)

ANNUAL DAY 2015 (2)

ANNUAL DAY 2015 (3)

ANNUAL DAY 2015 (4)

ANNUAL DAY 2015 (5)

ANNUAL DAY 2015 (6)

ANNUAL DAY 2015 (7)

ANNUAL DAY 2015 (8)

ANNUAL DAY 2015 (9)

ANNUAL DAY 2015 (10)

ANNUAL DAY 2015 (11)

ANNUAL DAY 2015 (12)

ANNUAL DAY 2015 (13)

ANNUAL DAY 2015 (14)

ANNUAL DAY 2015 (15)

ANNUAL DAY 2015 (16)

ANNUAL DAY 2015 (17)

ANNUAL DAY 2015 (18)

ANNUAL DAY 2015 (19)

ANNUAL DAY 2015 (20)

Disabled Day 2014
Previous Post Disabled Day 2014
உறுப்பினர்களுக்கான உணவு வழங்கல் : Providing Meals for Members
Next Post உறுப்பினர்களுக்கான உணவு வழங்கல் : Providing Meals for Members