கருவி நிறுவனம் அங்கத்தவர்களின் சுயமான நடமாடலுக்கு ஏற்ப பொருத்தமான வசதிப்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதனடிப்படையில் பார்வையற்ற அங்கத்தவர்களுக்கு வெள்ளைப்பிரம்புகள், கால் பாதிப்புற்ற அங்கத்தவர்களுக்கு சக்கர நாற்கால்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வின் போது. 10 பார்வையற்ற அங்கத்தவர்களுக்கு தீவக லயன்ஸ்கழகத்தினூடாக வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன. மேலும் 2 கால் பாதிப்புற்ற அங்கத்தவர்களுக்கு மே 24, செப்ரெம்பர் 16 ஆகிய திகதிகளில் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றை வழங்p வைத்த நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றிகளினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
