கருவி நிறுவனம் அங்கத்தவர்களிடையே மறைந்துள்ள கலைத்திறமைகளை இனங்கண்டு அவர்களின் திறன்களுக்கு ஏற்ப அங்கத்தவர்களின் முழுமையான பங்களிப்புடன் இராகஸ்ருதி இசைக்குழு, பட்டிமன்றக்குழு, நாடகக்குழு போன்ற குழுக்களை அமைத்து சமூகத்தில் ஆற்றுகைகளை நடாத்தி வருகின்றது. ஆலயம் மற்றும் பொது நிகழ்வுகளின் போதும், தொலைக்காட்சி நிகழ்வுகளின் போதும் இவ்வாற்றுகைகள் இடம் பெறுகின்றன.
யூன் 6இல் கருவியின் ஆண்டு விழா நிகழ்வின் போது பட்டிமன்ற ஆற்றுகை, அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலய மகோட்சவத்தின் போது யூலை 16 இல் இராகஸ்ருதி இசையாற்கை, யூலை 17 இல் பட்டிமன்ற ஆற்றுகை இடம் பெற்றன.
ஆற்றுகைகள்-2018


Previous Post
அணுகு வசதிப்படுத்தல் 2018

Next Post
காட்சிக்கூடம்-2018