கருவி உற்பத்தி சந்தைப்படுத்தல் பிரிவினால் கருவி சைன் எனும் பெயரில் திரவ சலவை சவர்க்காரம் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை விளம்பரப்படுத்தும் நோக்குடனும் கருவியின் சமூகப்பணிகளை சமூக மட்டத்தில் தெரியப்படுத்தும் நோக்குடனும் நாட்டின் பல பகுதிகளில் இடம் பெறும் பொது நிழ்வுகளின் போது எமது நிறுவனம் காட்சிக்கூடங்களினை அமைத்திருந்தது. மார்ச் 3இல் யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சி, மே 25இல் நல்லூர் சங்கிலியன் தோப்பில் இடம் பெற்ற மகளீர் தின சமூக செயற்பாட்டு மையக் கண்காட்சி, ஆகஸ்ட் இல் நல்லூர் மகோட்சவ காலத்தின் போது அமைக்கப்பட்ட காட்சிக்கூடம், ஒக்டோபர் 9,10,11 இல் தொழில் திணைக்கள ஏற்பாட்டில் இடம்பெற்ற திருகோணமலை வர்த்தக கண்காட்சி போன்றவற்றில் நிறுவப்பட்ட எமது நிறுவன காட்சிக்கூடத்தினூடாக பொது மக்கள் மத்தியில் எமது நிறுவனம் தொடர்பாகவும், கருவி சைன் தொடர்பாகவும் பல விடயங்களைத் தெரியப்படுத்த முடிந்தது.
