எமது அங்கத்தவர்களது பிள்ளைகளை கல்வி நிலையில் உயர் தேர்ச்சியடையச் செய்யும் நோக்குடன் கருவி நிறுவனம் இம்மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் 25 பிள்ளைகளுக்கு மாதாந்தக் கல்வி நிதி வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது. ஜனவரி 10இல் 10மாணவர்களுக்கும், மார்ச் 10இல் 15 மாணவர்களுக்கும், ஏப்ரல் 17இல் 10 மாணவர்களுக்கும், யூன் 22இல் 15 மாணவர்களுக்கும், ஆஸ்ட் 9 இல் 15 மாணவர்களுக்கும், ஒக்டோபர் 5இல் 5மாணவர்களுக்கும், ஒக்டோபர் 20இல் 20 மாணவர்களுக்கும், டிசெம்பர் 3இல் 55 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் டிசெம்பர் 25 அன்று மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது. மேலும் 20 மாணவர்களுக்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக துவிச்சக்கரவண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.
இவ்வுதவித்திட்டங்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கல்வியுதவி -2019


Previous Post
கல்வியுதவி -2018

Next Post
ஒளிவிழா-2019