கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை 2.12.2018 அன்று பருத்தித்துறை, கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஹாட்லிக் கல்லூரி மண்டபத்தில் கொண்டாடியிருந்தது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் திரு.து.இருதயராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரக்கல்லூரி அதிபர் செல்வி கிறேஸ் தேவதாயளினி தேவராஜா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக நெல்லியடி சிவன் அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் திரு கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களும், யாழ் இன்பத்தேன் மென்பான நிலைய உரிமையாளர் திரு.முருகன்றஞ்சன் முத்துக்குமார் அவர்களும், கருவியின் வளவாளர் திரு சுப்பையா கணேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்விக்கான ஆசியுரையினை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோயில் ஆதீனகர்த்தா சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராஜாக் குருக்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் கருவி நிறுவனம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே வலுவிழந்தவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நடாத்திய கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வில் கருவி அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள், வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கான கல்வி உதவிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்விற்கு கருவி அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மதிய போசனம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் தினம்-2018
Previous Post
ஒளிவிழா-2018
Next Post
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-2019