கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா 12.6.2019 அன்று கருவி நிறுவனத்தில் இடம் பெற்றது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பேராசிரியர் த.தேவராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக கோண்டாவில் இராமகிருஸ்ணா வித்தியாலய ஓய்வு நிலை அதிபர் திரு ளு.வாமதேவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்விற்கான ஆசிச் செய்தியினை அருட்பணி ளு.யு. இராஜநாயகம் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள், ஆடைகள் என்பனவற்றுடன் மதிய போசனமும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கருவியின் ஆண்டு விழா சிறப்பு மலராக வெளிவந்த வலு இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான வரவேற்புரையினை செயலாளர் திரு.து.யசிந்தன் அவர்களும், நன்றியுரையினை உபசெயலாளர் திரு.நா.கீதாகிருஸ்ணன் அவர்களும் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் கருவி அங்கத்தர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆண்டுவிழா-2019


Previous Post
கருவியின் ஆண்டு விழா-2018

Next Post
வெள்ளைப்பிரம்பு தினம்-2018