கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் புலவர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய “சிறுவர் செந்தமிழ் பாடல்கள்” எனும் நூலின் அறிமுக விழா 07.04.2018 சனிக்கிழமை அன்று கருவியின் தலைவர் திரு க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு.காசிநாதர் விஜயராஜசிங்கம்(மொழித்திறன் பயிற்றுனர்), பேராசிரியர் சி.சி.சிவலிங்கராஜா(முன்னாள் தமிழ்துறைத் தலைவர், பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்), திரு.கிருஷ்ணசாமி ஐங்கரன் (நலச்சேவை இணைப்பாளர், கருவி), திரு.க.விமலநாதன் (உதவிக்கல்வி பணிப்பாளர், முன்பள்ளி, வலயக்கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்), திரு சிவலிங்கம் சிவதாசன் (ஆரம்பக்கல்வி, முதன்மை ஆசிரியர், தென்மராட்சி வலயம்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நூல் நயப்புரையினை கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும், ஏற்புரையினை நூலாசிரியர் புலவர் மு.பாலசுப்ரமணியம் அவர்களும் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் கருவி சமுகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நூல் அறிமுக விழா-2018


Previous Post
வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு-2019

Next Post
ஓவியக் கண்காட்சி-2019