கருவி நிறுவனம் அங்கத்தவர்களை வாழ்வாதார நிலையில் உயர்வடையச் செய்யும் நோக்குடன் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இதனடிப்படையில்; பெப்ரவரியில் கருவி நிறுவனத்தினூடாக வழங்கப்பட்ட தையல் பயிற்சியில் பங்குபற்றி தையலினை சுயதொழிலாகச் செய்து வரும் 7 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் துணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. மே 13இல் பயனாளி ஒருவருக்கு பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்யும் பெட்டியும். சமையல் தொழிலினை மேற்கொண்டு வரும் பயனாளி ஒருவருக்கு சமையல் பாத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. டிசெம்பர் 25இல் பயனாளி ஒருவருக்கு கடையில் வியாபாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வுதவித்திட்டங்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.



